கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்! - கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் முக்கிய நீர்வீழ்ச்சியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது கரோனா ஊரடங்கு தொடர்வதால், சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெள்ளி நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்படுகிறது. கொடைக்கானல் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.