சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு, சுற்றுலா பயணிகளுக்கு தடை - flood in Chinna Suruli Falls
🎬 Watch Now: Feature Video

மேகமலை அருவி என்றழைக்கப்படும் சின்னசுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயனிகள் வந்து செல்வதுன்டு. அது மட்டுமல்லாமல் குமனன்தொழு, பொன்னம்படுகை, சிங்கராஜபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அருவி திகழ்கிறது. கரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதால் அருவிப்பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேகமலை அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடமலைக்குண்டு, வருசநாடு, குமணன் தொழு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அருவியில் குளிப்பதற்கு ஆர்வத்துடன் படையெடுக்கின்றனர். ஆனால் கடும் வெள்ளப் பெருக்கு, கரோனா பரவல் தடையால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துவருகின்றனர். இதனால் சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.