பாஜக வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபோதையில் பாம்பு டான்ஸ் ஆடிய நபர்; வீடியோ வைரல்! - thirupur latest news
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் எல்.முருகனை வரவேற்க, மேளதாளம் முழங்க மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், வரவேற்பு நிகழ்ச்சியின்போது இசைக்கப்பட்ட மேளதாளத்திற்கு ஏற்றவாறு பாம்பு டான்ஸ் ஆடினார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தற்போது இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.