திடீரென உயர்ந்த கடல் மட்டம்: பாம்பன் பாலத்தை மோதி சென்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் - பாம்பன் பாலத்தை மோதி சென்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10117380-thumbnail-3x2-try.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவையும், மண்டபத்தையும் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியிலிருந்து பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் திறந்த பிறகே படகுகள் செல்வது வழக்கம். நாகப்பட்டினத்திலிருந்து 15 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் வடக்கு கடல் பகுதியிலிருந்து தென் கடல் பகுதிக்கு சென்றன. அப்போது, கடலின் நீர்மட்டம் உயர்ந்து, பாம்பன் பாலம் திறக்காததாலும் சில படகுகள் பாலத்தின் மையப்பகுதியில் மோதி சென்றன. பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் இருந்த ஊழியர்கள் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணித்தனர்.
Last Updated : Jan 5, 2021, 8:57 AM IST