பட்டப்பகலில் குப்பை வண்டியில் மறைத்துவைத்து கள்ளச்சாராய விற்பனை! - cuddalore district news in tamil
🎬 Watch Now: Feature Video
கடலூர் மாவட்டம், வேப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சித்தேரி கிராமத்தில், பயன்பாட்டில் இல்லாத குப்பை வண்டியில் பாக்கெட் சாராயங்களை மறைத்துவைத்து ஒரு பெண்ணும் இளைஞரும் விற்பனை செய்வது போன்றும், இளைஞர்கள் பலரும் அதை வாங்கிச்செல்வது போன்றும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுதொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில், அரசு அலுவலர்கள், காவலர்கள் முழு நேரப் பணியில் இருக்கும்போது கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.