விபத்தில் தூக்கிவீசப்பட்ட கன்றுக்குட்டி; காப்பாற்ற வழியில்லாமல் தவித்த தாய்ப் பசு! - கன்றுக்குட்டியை காப்பாற்ற வழியில்லாமல் தவித்த தாய்ப் பசு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8359459-thumbnail-3x2-hda.jpg)
பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தத்தில் ஊரடங்கை மீறி அதிவேகமாக வந்த வேன் சாலையில் நின்றுகொண்டிருந்த கன்றுக்குட்டி மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே இறந்து போனது. இதையடுத்து அங்குவந்த தாய்ப் பசு தனது கன்றுக்குட்டியை மீட்க வேண்டும் என்பதற்காக அருகில் இருந்த நபர்களை உதவிக்கு அழைப்பது போல், கன்றுக்குட்டியின் அருகே சுற்றி, சுற்றி வந்த காட்சி காண்போரைக் கண் கலங்கச் செய்தது.
ஊரடங்கில் காவல் துறையினர் முறையாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தால், கன்றுக்குட்டியின் உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்காது என மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.