காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி! - விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் காவல் துறையினர், அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் இணைந்து பொதுமக்களுக்கு கரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆலங்காயம் பேருந்து நிலையம், பஜார், நிம்மியம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்காயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் நூதன முறையில் எமதர்மராஜா வேடம் அணிந்து சாலையில் முகக்கவசம் இல்லாமல் செல்லும் நபர்களை பாச கையிற்றால் பிடித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களுக்கு கரோனா நோய் தடுப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.