ராமநாதபுரத்தில் இரண்டாம் நாளாக வெளுத்து வாங்கிய மழை... - வானிலை ஆய்வு மையம்
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்டம்பர் 6ஆம் தேதிவரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, சிக்கல் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது.
நீண்ட நாள்களுக்கு பிறகு ராமநாதபுரத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கனமழை பெய்தது மக்களிடையே, விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.