மகள்களைப்பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் - சென்னை ஐபிஎஸ் அலுவலரின் மகள் பாசம் - காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் விஜயகுமார்
🎬 Watch Now: Feature Video
சென்னைப் பொருளாதார குற்றப்பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர், விஜயகுமார் ஐபிஎஸ். இவருக்கு நிலா என்ற மகள் உள்ளார். இந்தநிலையில் ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமார் வீட்டில் இருக்கும்போது சிறுமி நிலா அவரது தந்தைக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டு, தந்தையுடன் விளையாடி கொண்டு இருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த மக்கள் என்னதான் காக்கி சட்டையாக விறைப்பாக இருந்தாலும் மகள்களுக்கு அன்பான அப்பா தான் என வியக்கின்றனர்.