சென்னை காவல் துறையின் மகளிர் தின ஸ்பெஷல் குறும்படம்! - chennai city police women's day video
🎬 Watch Now: Feature Video

உலகம் முழுவதும் இன்று மகளிர் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் சென்னை மாநகரக் காவல் துறை சார்பில் பெண்கள் தின குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, இன்று மகளிர் தின ஸ்பெஷலாக வெளியானது. இதில் பிரமிக்கத்தக்க விஷுவல் எபெக்டுடன், பெண் காவலர்கள் குதிரையில் ஏறிச் செல்வது, கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது போன்றவை இடம்பெற்று பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.