Viral video: மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த கார் - palakod news
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரிமங்கலம் சாலையில், பொம்மஹள்ளி பகுதியிலிருந்து கரிமங்கலம் நோக்கி நேற்று இரவு 12 மணியளவில் சென்றுகொண்டிருந்த கார் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியது. இதனால் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரில் பயணம் செய்தவர்கள் உடனடியாக காரைவிட்டு இறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.