திரெளபதி அம்மன் கோயிலில் எருது விடும் விழா - First Prize
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 67ஆம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 150 காளைகள் போட்டியில் பங்கேற்க வைத்தனர். குறிப்பிட்ட விநாடிகளில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.60 ஆயிரம்,இரண்டாம் பரிசு ரூ.50ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.40 ஆயிரம் என 30 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.