ஈரோடு அருகே மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள்! - ஈரோடு
🎬 Watch Now: Feature Video
ஈரோடு : தாளவாடி அடுத்த மெட்டல்வாடி பகுதியில் பஞ்சாயத்து சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. தற்போது, இவை பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல், அதன் மீது அங்கு உள்ள மரக்கட்டைகளை வைத்துள்ளனர். இவற்றை அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.