சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு - Border Security Force flag parade in Nagapattinam
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11177082-thumbnail-3x2-ngp.jpg)
நாகப்பட்டினம்: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக நாகப்பட்டினத்தில் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
இக்கொடி அணிவகுப்பு ஊர்வலம், நாகப்பட்டினம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில், அவுரி திடலிலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.