தண்ணீர் தேடி விளைநில கிணற்றுக்குள் விழுந்த காட்டுமாட்டை மீட்ட வனத் துறையினர் - கோலனிமட்டம் கிணற்றுக்குள் விழுந்த காட்டு மாட்டை மீட்ட வனத்துறையினர்
🎬 Watch Now: Feature Video

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி பொழிவு இருப்பதால் வனங்கள் பசுமை இழந்துள்ளன. இந்நிலையில் குந்தா வனசரகத்திற்குள்பட்ட கோலனிமட்டம் பகுதியில் தண்ணீர் தேடிவந்த காட்டு மாடு ஒன்று அங்குள்ள விளைநிலத்திலிருந்த கிணற்றுக்குள் தவறிவிழுந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற வனத் துறையினர் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி உதவியுடன் காட்டுமாடு செல்ல வசதியாகப் பாதை அமைத்தனர். இதைத் தொடர்ந்து மெதுவாக மேலே ஏறிவந்த மாடு வனத்திற்குள் சென்றது.