தேயிலை பூங்காவின் நீர் தொட்டியில் சிக்கிய கரடி மீட்பு! - கரடியை மீட்ட வனத் துறையினர்
🎬 Watch Now: Feature Video

உதகை அடுத்துள்ள தொட்டபெட்டா சாலையில் அமைந்துள்ளது அரசு தேயிலை பூங்கா. இந்தப் பூங்காவில் தண்ணீர் சேமித்து வைக்க தயார் செய்யப்பட்ட தொட்டி நீண்ட நாட்களாக பயனற்று கிடந்துள்ளது. இந்த தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு வயது மதிக்கத்தக்க கரடி தவறி விழுந்து வெளியே வரமுடியாமல் போராடிக் கொண்டிருந்தது. சம்பவம் அறிந்து விரைந்து சென்ற உதகை வனத்துறையினர், ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கரடியை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.