Watch Video: இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆவடி மக்கள்! - பொதுமக்கள் கோரிக்கை
🎬 Watch Now: Feature Video
சென்னை புறநகர்ப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீரானது குளம்போல தேங்கியுள்ளது. குறிப்பாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ரேவா நகரில் 150 வீடுகளின் தரை தளத்தில் மழைநீர் இடுப்பளவிற்கு சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இருசக்கர வாகனத்தின் சக்கரம் தெரியாத அளவிற்கு நீரில் ஊர்ந்து செல்லும் காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து குட்டித் தீவு போல காட்சியளிக்கிறது.