Tomoto: ஹெட்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்; அலைமோதிய மக்கள் கூட்டம்! - அருப்புக்கோட்டையில் ஹெட்ஃபோனுக்கு தக்காளி
🎬 Watch Now: Feature Video
விருதுநகரின் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தின் உள்ளே எம்.ஆர்.பவுச்கடை எனும் தனியார் செல்போன் கடை அமைந்துள்ளது. இங்கு 99 ரூபாய்க்கு ஹெட்போன் வாங்கினால், 1 கிலோ தக்காளி இலவசம் எனும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து அங்கு ஹெட்போன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தக்காளி விலை உயர்வையடுத்து பலரும் ஆஃபர்களை அள்ளி வீசி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.