எருது விடும் திருவிழா - சீறிப்பாய்ந்த காளைகள் - எருது விடும் திருவிழா
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், மாதனூர் போன்ற பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று, வாடி வாசலில் இருந்து சீறிப் பாய்ந்தன. குறிப்பிட்ட எல்லையை குறைந்த வினாடிகளுக்குள் ஓடி கடந்த காளைக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் பரிசாக வழங்கப்பட்டது.