சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை! - Krishnagiri District News
🎬 Watch Now: Feature Video

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசூர் வரை உள்ள காப்புக்காட்டில் ஏராளமான வன விலங்குகளும் யானைகளும் உள்ளன. மேலும், வனப்பகுதியில் உள்ள யானைக் கூட்டங்களில் இருக்கும் யானைகள் அவ்வப்போது உணவைத் தேடி, நகர்ப்புற பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (09.08.20) மாலை தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள மரக்கட்டா வனப்பகுதியிருந்து வெளியேறிய ஒற்றை யானை, சாலைப் பகுதியில் சுற்றித் திரிந்ததால், அவ்வழியாக வாகனத்தில் சென்ற நபர்கள் அச்சத்தில் உறைந்து வாகனங்களை நிறுத்தினர்.