ஆஸ்திரேலியன் ஓபன்: காயத்திலும் களத்தில் கெத்து காட்டிய ஆண்ட்ரெஸ்கு!
🎬 Watch Now: Feature Video
கனடாவின் நட்சத்திர வீராங்கனையும், யூ.எஸ். ஓபனில் தொடரின் நடப்பு சாம்பியனுமான பியான்கா ஆண்ட்ரெஸ்கு, மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபனில் பங்கேற்று விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் தைவானின் சீஹ் சு வேய்யை எதிர்த்து ஆண்ட்ரெஸ்கு விளையாடினார். போட்டியின்போது காயமடைந்த ஆண்ட்ரெஸ்கு தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி களத்தில் தனது கெத்தை நிரூபித்தார். இருப்பினும் இப்போட்டியில் ஆண்ட்ரெஸ்கு 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைத்து தொடரிலிருந்து வெளியேறினார்.