”எங்கள் பாடும் நிலாவே...உன் குரல் கலந்த காற்று எங்களைவிட்டு மறையவில்லை” - பிரபல இயக்குநர் உருக்கம்! - யக்குநர் ஆர்.வி. உதயகுமார் உருக்கமான வீடியோ
🎬 Watch Now: Feature Video

பிரபல பாடகர் எஸ்பிபியின் மறைவு, திரையுலகைச் சேர்ந்த பலரையும் இன்றுவரை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவர் குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் எஸ்பிபி குறித்து உருக்கமாகப் பேசி, காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”எங்கள் பாடும் நிலாவே...நீ மண்ணைவிட்டுப் பிரிந்தாலும் எம்மை விட்டுப் பிரிவதில்லை. உனது காந்தக் குரல் உன்னை விட்டுப் பிரிந்தாலும், நீ பாடிய பாடல்கள் உன்னை விட்டுப் பிரிவதில்லை. உமது மூச்சுக்காற்று உன்னை விட்டுப் பிரிந்தாலும், உன் குரல் கலந்த காற்று எங்களை விட்டு மறையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டுள்ள இந்தக் காணொலி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.