காடு என்றாலே எனக்கு பயம் - 'காடன்' விஷ்ணு விஷால் - காடன் இசை வெளியிட்டு விழாவில் விஷ்ணு விஷால்
🎬 Watch Now: Feature Video
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். இப்படத்தின் இசை, டீஸர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால் கலந்துக்கொண்டு பேசுகையில், காடு, இயற்கை என்றாலே எனக்கு பயம். படப்பிடிப்பில் யானையுடன் நடக்கும்போது பயமாக இருந்தது. யானை மீது ஓடி ஏறுவது போன்று ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியை கிட்டத்தட்ட 17 முறை ரீடேக் வாங்கி நடித்தேன். அன்புக்கு உலகில் மொழி வேறுபாடு இல்லை. யானையை பிரியும்போது வருத்தமாக இருந்தது. இந்தப் படம் இயற்கையான படைப்பு. ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். இந்த படத்திற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது என்றார்.