யாரையும் தாழ்த்திப் பேசாதீர்கள் - ஜெய் பீம் குறித்து சந்தானம் கருத்து - ஜெய் பீம் விவகாரம்
🎬 Watch Now: Feature Video
'ஜெய் பீம்' திரைப்படம் தொடர்பாக அதில் இடம்பெற்ற பெயர், குறியீடு தங்க சமூகத்தை எதிர்மறையாகக் காட்டுவதாக வேதனை தெரிவிக்கும் வன்னிய சமுதாயத்தினரும், பாமகவினரும் நடிகர் சூர்யாவுக்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் திரைத் துறையினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் நிலையில், நடிகர் சந்தானம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சினிமாவை அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் பார்க்கவரும் நிலையில் ஒருவரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்தி சொல்லக் கூடாது என அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.