மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.2.74 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை - சிசிடிவி காட்சி
🎬 Watch Now: Feature Video
சென்னை பள்ளிகரணை சந்திரா நகரில் வெங்கடேசன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் வைத்திருந்த 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, கடையின் பூட்டை உடைத்து இருவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST