பைக் திருட்டில் இது புது ரூட்டு.. 15 பைக்களுடன் சிக்கிய பலே திடுடன்! - திருப்பத்தூர் போலீஸ்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில், மாவட்டத்தில் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவின் பேரில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தாமலேரிமுத்தூர் அருகே சந்தேகப்படும்படியான நபரைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவர் கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுகுமாரின் மகன் பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது.
பாலாஜியிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் ஜோலார்பேட்டை, குசிலாப்பட்டு, ஆலங்காயம், நாட்றம்பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் திருப்பத்தூர் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் காவல் துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர். மேலும் குற்றச் செயலில் ஈடுபட்ட பாலாஜியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.