Video: ஓசூரில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை - hosur silambam world record news
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி அருகே ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார். இதில் 5 வயதுக்கும் மேற்பட்ட 100 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். இறுதியில் தற்காப்பு கலைகளையும் செய்து அசத்தினர். இதனை குளோபல் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் உதய் மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் நடுவராக இருந்து மேற்பார்வை செய்தனர். 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனைப் படைத்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டன.