கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளம்! - பேத்துப்பாறை
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை வயல் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் திடீரென இன்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக்கடக்க முடியாமல் சிரமம் அடைந்து வருவதுடன் விவசாயப்பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பெரும் அவதி அடைந்தனர். மேலும் பேத்துப்பாறை வயல் பகுதி ஆகிய இடங்களில் இரும்பு பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST