Video: கோவையில் மளிகை கடையை சூறையாடிய யானைக்கூட்டம்! - முதுமலைக்காடுகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், தண்ணீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளிலிருந்து அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டி யானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது மளிகைக் கடையைச் சேதப்படுத்தி உள்ளே இருந்த சில உணவுப் பொருட்களைச் சாப்பிட்டது. அதைப் பார்த்து அச்சமடைந்த மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் அதிக ஒலி எழுப்பி யானைகளைக் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
வீரபாண்டி புதூரை அடுத்த மூலக்காடு என்னும் மலையடிவார கிராமத்திற்கு அடிக்கடி தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் தற்போது அதனையும் தாண்டி கிராமத்திற்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் வனத்துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணியை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.