இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி குழுவில் இடம்பெற்ற குன்னூர் இளைஞருக்கு உற்சாக வரவேற்பு! - India vs japan in asian games
🎬 Watch Now: Feature Video
Published : Oct 11, 2023, 6:28 PM IST
நீலகிரி: ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின், வீடியோ அனலைஸ் (video analysis team) அணியில் தலைமை வகித்த குன்னூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவில் உள்ள ஹாங்சோ என்னும் இடத்தில் 2023ஆம் அண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
அதில், இந்தியாவை சார்ந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். அந்த வகையில் ஆண்களுக்கான ஹாக்கி அணி ஜப்பான் நாட்டை 5 - 2 என்று கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி பதக்கம் வென்றது. மேலும் இந்தியாவின் ஹாக்கி அணியின், வீடியோ அனலைஸ் அணியை குன்னூரை சேர்ந்த அசோக்குமார் தலைமை வகித்திருந்தார்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய அசோக்குமாருக்கு, நீலகிரி மாவட்டம் ஹாக்கி சம்மேளனம் மற்றும் நீலகிரி கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோக்குமார், இந்திய ஹாக்கி அணி ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றது தனக்கு பெருமை அளிப்பதாகவும், தனக்கு அளித்த வரவேற்புக்கு நன்றியும் தெரிவித்தார்.