ஈரோட்டில் விஜயகாந்த் மறைவையொட்டி மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்..! - chennai news
🎬 Watch Now: Feature Video
Published : Dec 29, 2023, 10:59 PM IST
ஈரோடு: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (டிச.26) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று (டிச.28) காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள அக்கரை தத்தப்பள்ளி, இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் மகேஷ், ஆனந்த் மற்றும் நாகராஜ். விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்கள் மூன்று பேரும் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் தீவிர ரசிகர்கள்.
உடல் நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து சோகத்தில் ஆழ்ந்த இவர்கள் மூன்று பேரும், இன்று (டிச.29) மாலை இந்திரா நகரில் மொட்டை அடித்து விஜயகாந்த்தின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைந்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என மூன்று பேரும் மனமுடைந்தனர். மேலும் விஜயகாந்த் மறைவிற்காக மொட்டை அடித்த மூன்று பேரும் அவரின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறி அழுதனர் என்பது குறிப்பிடத்தக்கது.