video: கோடை வெயிலில் நீச்சல் குளத்தில் விளையாடி மகிழ்ந்த பழனி கோயில் யானை!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் 57 வயதான பெண் யானை கஸ்தூரி பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பழனியிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கோயில் யானை நீச்சல் குளம் தண்ணீரில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்: மோதிரம் பரிசளித்து நெகிழ வைத்த கிராம மக்கள்!
தண்ணீர் நிறுத்தப்பட்ட நீச்சல் குளத்தில் கஸ்தூரி யானை படுத்து, நீந்தி விளையாடி மகிழ்ந்தது. கஸ்தூரி யானைக்காக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக காரமடையில் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் நீச்சல் குளம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: மீன்பிடி திருவிழா: நத்தம் அருகே கேசரி கண்மாயில் ஓடி ஓடி மீன் பிடித்த கிராம மக்கள்!
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் கோயில் யானைக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் பழங்கள் உணவாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.