லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய காவலர்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ திருப்பத்தூர்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கிருஷ்ணகிரியில் இருந்து வேலூரை நோக்கி கிரானைட் கற்கள் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரிடம் இருந்து, அம்பலூர் காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளன் என்பவர் பணம் வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இதனால் லாரி ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும் எனவே காவல் துறையினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சீனிவாசன் என்பவர் மணல் கடத்தல் காரர்களிடம் பீட் பணம் கேட்கும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் காவலர் ஒருவர் லாரி ஓட்டுநரிடம் பணம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Theni News:விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள்!