ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் களைகட்டிய வள்ளி கும்மி நடனம்!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தமிழகத்தில் நாட்டுப்புறப் பாட்டுக்கான முக்கியத்துவம் மக்கள் மத்தியில் அழிந்து வருகிறது. இதனை பாதுகாக்கும் விதமாக கலைஞர்கள் சமீப காலங்களில் மக்கள் மத்தியில் இந்த கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஒயிலாட்டம், கும்மியாட்டம், சலங்கை ஆட்டம் மற்றும் அம்மன் புகழ் களியாட்டம் ஆடி வரும் நிகழ்வுகளில், தற்போது நாட்டுப்புறக் கலையை பரப்பும் விதமாக கொங்கு வள்ளி கும்மி நடனம் பரவலாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பங்கேற்ற வள்ளி கும்மி பாட்டு நடனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வள்ளி கும்மி நடன பாடல் ஆசிரியர் ஒலிபெருக்கியில் நாட்டுப்புற பாடல் மற்றும் அம்மன் பாடல்களைப் பாட, அதற்கு ஏற்றவாறு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒரே நிற உடை அணிந்தவாறு வள்ளி கும்மி நடனம் ஆடினர்.