பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.58 கோடி வசூல்! தங்கம், வெள்ளி மட்டும் எவ்வளவு தெரியுமா? - திண்டுக்கல் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Sep 27, 2023, 11:26 AM IST
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சாமி கோயில் என்ற அழைக்கபடும் பழனி முருகன் கோயில் புகழ் பெற்றதாகும். சமீபத்தில் இக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. அந்த எண்ணிக்கை முடிவில் ரொக்கமாக ரூபாய் 2 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரத்து 263 கிடைத்துள்ளது.
அதில் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். தங்கம் மட்டும் 1,070 கிராமும், வெள்ளி 13 ஆயிரத்து 250 கிராமும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என பல்வேறு வெளிநாட்டு பணம் 901-ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. இது தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கோயில் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் உண்டியல் எண்ணிக்கையின் போது பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் குழு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.