Summer vacation: ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்! - Nilgiri Mountain Railway Line

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 17, 2023, 8:49 AM IST

நீலகிரி: தமிழகமெங்கும் கோடை வெயில் வாட்டி வதைக்கத் துவங்கிவிட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது குறைந்த அளவாக 12 டிகிரி செல்சியஸும் அதிக அளவாக 22 டிகிரி செல்சியஸும் வெப்ப நிலை காணப்படுகிறது. இந்த இதமான கால நிலையினை அனுபவிப்பதற்கும், இங்குள்ள இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்கும், மலை ரயிலில் பயணிப்பதற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். இதனால் உதகை பகுதி களைக்கட்டியுது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை போன்றவைகள் உள்ளன. தோட்டக் கலைத் துறையின் கீழ் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, உள்ளிட்டவை உள்ளன.

மாவட்டத்தில் நிலவும் குளுகுளு கால நிலை, மற்றும் இயற்கைக் காட்சிகள் உள்ளிட்டவற்றை அனுபவிக்கத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் நீலகிரியில் இதமான காலநிலை நிலவுகிறது இதனை அனுபவிப்பதற்காக விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தந்திருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மலை ரயிலில் பயணிப்பதிலும், படகு சவாரி செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டினர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு வருகை புரிந்திருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.