டி.ஜி.பி அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனு பெறப்படும்- சங்கர் ஜிவால் அறிவிப்பு! - cm
🎬 Watch Now: Feature Video
சென்னை: பொதுமக்கள் மற்றும் போலீசாரின் குறைகளைத் தீர்க்கும் வகையில் அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை வாரத்தில் ஒரு நாள் நேரடியாகச் சந்தித்து மனுக்களைப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அந்த வகையில் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அரசு விடுமுறை நாட்கள் தவிரத் தினமும் காலை 11.30 மணிக்குப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) சங்கர் ஜிவால் பொதுமக்கள் மற்றும் காவலர்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்று வருகிறார். குறிப்பாக டி.ஜி.பி அலுவலகத்தின் பார்வையாளர்கள் அறையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை நேரடியாக அளித்து குறைகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறியிருந்தார்.
அதன்படி இன்று (ஜூலை 6) பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுடைய புகார் மனுக்களைத் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பெற்று வருகிறார்.பொதுமக்களும், போலீசாரும் சந்தித்து மனு கொடுக்கலாம் என்றும், 2 மாதத்திற்கு ஒருமுறை பொதுமக்களும், போலீசாரும் கொடுத்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் டி.ஜி.பி அலுவலக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படும் என்றார்.
பெரும்பாலான காவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் குடியிருப்பு தொடர்பான மனுக்களும், பொதுமக்கள் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாத புகார்களை அளித்தும் வருகின்றனர். டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டபோது ரவுடிகளுக்கு எதிரான, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனவும் போலீசார் மற்றும் பொதுமக்களின் நலன் காக்கப் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தூர் மருத்துவமனையில் 18 குழந்தைகள் உயிரிழப்பு? கலப்பட பால் காரணமா?