விபத்தைத் தடுக்க பூஜை போட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்..வைரலாகும் வீடியோ! - friends of police
🎬 Watch Now: Feature Video
Published : Dec 12, 2023, 11:08 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கக் கூடிய புறவழிச்சாலைப் பகுதி உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் தினந்தோறும் கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு விதமான வாகனங்கள் சென்று வருகிறது.
இத்தகைய சூழலில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் தொடர்ந்து சர்வ சாதாரணமாக விபத்துகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இப்பகுதிகளில் விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும், இப்பகுதிகளில் விபத்துகள் நடைபெறுவது என்பது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரிடக் கூடாது என்பதற்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஜோசப் என்பவர் பூசணி காய், கற்பூரம், எலுமிச்சைப் பழம், தேங்காய் போன்ற பூஜை பொருட்களை வைத்து பூஜை செய்து உள்ளார். இதனை அப்பகுதியில் உள்ள ஒருவர் வீடியோ எடுத்த நிலையில், தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு நெடிசன்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.