கடம்பூர் மலைப்பகுதி சாலையில் ஓடிய புலிக்குட்டிகள்! - Kadambur
🎬 Watch Now: Feature Video
Published : Oct 12, 2023, 2:10 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள சாலைகளின் நடுவே இரவு நேரங்களில் புலிகள் அவ்வப்போது நடமாடுகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி மலை கிராமத்திற்குச் செல்வதற்காக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது.
இவ்வாறு குன்றி வனச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 புலிக்குட்டிகள், சாலையில் அங்கும் இங்கும் ஓடி உள்ளன. அப்போது, அரசுப் பேருந்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டு இரண்டு புலிக்குட்டிகளும் சிறிது தூரம் குடுகுடுவென ஓடியதை பேருந்தில் இருந்த பயணிகள் கண்டனர்.
தொடர்ந்து, சிறிது தூரம் ஓடிய புலிக்குட்டிகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இந்த காட்சியை பேருந்தில் சென்ற பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவ்வப்போது வனவிலங்குகள் சாலைகளில் நடமாடுவது அதிகரித்து உள்ளது.