கந்துவட்டி கொடுமை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தற்கொலை முயற்சி - தீக்குளித்து தற்கொலை முயற்சி
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம், ஒலகடம் பகுதியைச்சேர்ந்தவர் பழனிவேல். இவர் தனக்குச்சொந்தமான 2.50 கோடி மதிப்புள்ள நிலத்தை ஜம்பைப் பகுதி பாமகவைச் சேர்ந்த பழனிசாமி என்பவரிடம் ரூபாய் 25 லட்சத்திற்கு அடமானமாக வைத்து கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார். தொடர்ந்து மாதம் மாதம் வட்டி செலுத்தி வந்த நிலையில் அசல் 25 லட்சத்தில் 15 லட்சமும் செலுத்திய நிலையில் 10 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டி இருந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை பழனிசாமி என்பவர் வேறு ஒருவருக்கு விற்றதாக கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பழனிவேலின் குடும்பத்தினரான ஜோதிமணி, நேத்ராவதி, நல்லம்மாள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST