ஆம்லேட் எப்போ வரும்? - உணவக உரிமையாளரை தாக்கிய போதை இளைஞர்கள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலைய வளாகத்தில் உணவகம் நடத்தி வருபவர், சுப்பிரமணி. இவர் வழக்கம்போல் நேற்று உணவகத்தில் இருந்தபோது, குடிபோதையில் மூன்று பேர் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். 

அப்போது, ஆம்லேட் கேட்டால் தர முடியாதா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் செய்யவில்லையே எனக் கூறியுள்ளார். இதனையடுத்து குடிபோதையில் இருந்த மூன்று பேரும் கடையிலிருந்த பொருட்களை வீசி எறிந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுப்பிரமணியை அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் அடித்தும், அவரது மகன் தினேஷையும் தாக்கியுள்ளனர். 

அப்போது, அங்கு வந்த சுப்பிரமணியன் மனைவி லட்சுமி, தனது மகன் தினேஷைக் காப்பாற்ற போராடும் காட்சிகள் அருகில் உள்ள பழக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தகராறில் ஈடுபட்ட அசோக், நவீன் மற்றும் சீனிவாசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவகத்தில் ஆம்லேட் கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.