ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோயில் திருவிழா; நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள் - ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோயில் திருவிழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18417996-thumbnail-16x9-cbe.jpg)
கோயம்புத்தூர்: ஆலாந்துறையில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலின் 96ஆம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய கோயில் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
முக்கிய நிகழ்வான அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாலை நேரத்தில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும் பறவை வாகனத்தில் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டன.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிலர் காவல் தெய்வங்களின் அலங்காரத்துடன் ஊர்வலம் மேற்கொண்டனர். தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இன்று மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.