தூத்துக்குடி மாவட்டம் டோட்டல் மிஸ்ஸிங்.. விஜய் கல்வி விருது விழாவில் அழைக்கப்படாத சோகம் - Thalapathy Vijay Education award ceremony
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: திரைப்பட நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை, நேற்று (ஜூன் 17) சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடத்தினார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் தகவல்கள் சேமிக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் வாங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல், அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் ஒரு சில நாட்களுக்கு முன்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒருவரைக் கூட அழைத்துச் செல்லவில்லை என மாணவர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 36 பேரை அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில், ஒருவரை கூட அழைத்துச் செல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக மாணவ- மாணவியர்கள் தெரிவித்து உள்ளனர்.