திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 3ஆம் நாள் தெப்ப உற்சவம் கோலாகலம்! - Annamalaiyar Temple Theppa Utsavam
🎬 Watch Now: Feature Video
Published : Nov 30, 2023, 10:04 AM IST
திருவண்ணாமலை: பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவ.17-ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்களும் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதில் காலை மற்றும் இரவில் சுவாமிகள் பல அலங்காரங்களுடன், பல்வேறு வாகனங்களில் மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த நவ.26-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறையின் முன்பாக பரணி தீபம் ஏற்றப்பட்டு, அன்று மாலை 6 மணியளவில் 2,668 உயரம் உள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றபட்டது. இதனைத் தொடந்து, 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவ விழா கடந்த 27ஆம் தொடங்கியது.
சுந்திரசேகரர், பராசக்தியம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்று முடிந்த நிலையில், 3ஆம் நாளான நேற்று, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு சண்டிகேசுவரர் உற்சவத்துடன் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது.