கும்பக்கரை அருவியில் பெண்களைக் கேலி செய்த நபர்கள்: வனத்துறைக்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை - கும்பக்கரை அருவியில் பெண்களை கேலி செய்த மர்ம நபர்கள்
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 24) கும்பக்கரை அருவிக்கு மதுபோதையில் வந்த சில ஆண்கள் அருவியில் குளித்த பெண்களை கேலி செய்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட வனத்துறை ஊழியரை தாக்கி, கத்தியால் குத்த முயன்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளதோடு, வனத்துறையினர் கும்பக்கரை அருவிக்குச் செல்லும் நுழைவுவாயிலிலேயே சோதனை செய்து மது அருந்துவிட்டு வருபவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது எனவும், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அனுமதி இல்லை என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
Theni Kumbakkarai falls