Viral Video:இதையும் விட்டு வைக்கலையா... BAR-ஆக மாறிய பஞ்சாயத்து அலுவலகம்! - Virudhunagar news today
🎬 Watch Now: Feature Video
விருதுநகர் அருகே சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைகுட்டம் ஊராட்சியின் தலைவராக முத்துராஜ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊராட்சி அலுவலகத்தை சுத்தம் செய்வதற்காக தூய்மைப் பணியாளர்கள் வந்து, பணி முடித்து செல்வதற்கு முன் அலுவலகத்தில் வைத்து மது அருந்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் பலரால் இவ்வீடியோ ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அலுவலகங்களில் வைத்து மது அருந்துவது தொடர்ந்து வாடிக்கையாகி வருவதாகவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பாக ஊராட்சி செயலரிடம் கேட்டபோது, வீடியோ தொடர்பாக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.