மிக்ஜாம் புயலால் ராணிப்பேட்டையில் தரைப்பாலம் மூழ்கியது.. 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி! - தரைப்பாலம் மூழ்கியது
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-12-2023/640-480-20187588-thumbnail-16x9-vlr.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Dec 5, 2023, 10:29 AM IST
ராணிப்பேட்டை: மிக்ஜாம் புயல் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இந்த தொடர்மழையால் நீர்நிலைகள் நிரம்பி வெளியேற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் சிறுனமல்லி பகுதியில் செல்லக் கூடிய கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், தரைப்பாலம் முழுவதுமாக நிரம்பியுள்ளது.
இதனால் அரக்கோணத்திலிருந்து நெமிலி வழியாக வேலூர் செல்லும் முக்கிய சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சேந்தமங்கலம் வழியாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இந்த தரைப்பாலத்தை உயர்த்தி, உயர்மட்ட பலமாக மாற்றித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனவும் கூறுகின்றனர். மேலும், சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, விரைந்து இந்த தரைப்பாலத்தை உயர்த்தி தர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.