முள்ளிவாய்க்காலில் 14வது தமிழினப்படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு!
🎬 Watch Now: Feature Video
இலங்கை: கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிகட்டப் போர் நடந்தது. அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்து, அதி தீவிரமாக தமிழர் வாழும் பகுதிகளை தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார். இந்தப் போரின்போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கறுப்பு நாளை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அமைப்புகள் முள்ளி வாய்க்கால் நினைவு தினமாகவும், இனப் படுகொலை நினைவு தினமாகவும் அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு இன்று (மே 18) 14வது முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின், முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் போரில் உயிரிழந்த உறவினர்கள் ஆவர். இவர்கள் போரில் இறந்து போன தங்களது உறவினர்களின் புகைப்படங்களை வைத்து கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தினர். போரில் 14 உறவுகளை இழந்த, மன்னார் பகுதியைச் சேர்ந்த கொன்சியூலஸ் வினிதா என்றப் பெண்ணால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வசமிருந்த சட்டத்துறை பறிப்பு; புவி அறிவியல் துறை வழங்கல்