ஆயுதங்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை! வீடியோ வைரல்! - news about Tamilisai Soundararajan
🎬 Watch Now: Feature Video
Published : Oct 25, 2023, 10:17 AM IST
ஹைதராபாத்: இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் (அக். 23) ஆயுத பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்தனர். பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்களிலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆயுத பூஜை விழாவை கொண்டாடினார். ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணிகளுக்காக இருக்கும் வீரர்களின் கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு சந்தன, குங்குமப் பொட்டு வைத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு பூஜை செய்து ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடினார்.
தொடர்ந்து ஆளுநரின் கார் மற்றும் ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் கார்களுக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்யப்பட்டது. இது குறித்த காணொலி வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: "அந்த மனசு தான் சார் கடவுள்" - மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய இளைஞர்!