"தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை” - வடமாநில தொழிலாளர்கள் - வடமாநிலத்தவர்கள் பேசிய வீடியோ
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற காணொலிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ்குமார் வருத்தம் தெரிவித்த நிலையில், அந்த வீடியோ பொய்யானது என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆதாரங்களுடன் வீடியோ வெளியிட்டார்.
மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்று வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு அறிவித்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்திகளை பரப்புவோர் இந்தியாவிற்கே எதிரானவர்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
இது போன்ற வதந்திகளை பரப்புவது தொடர்பாக தூத்துக்குடி. கிருஷ்ணகிரி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் தலா ஒரு வழக்கு தமிழ்நாடு காவல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்து குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை, காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொய்யான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா எச்சரித்துள்ளார்.
மேலும் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவரை சைபர் செல் மற்றும் சைபர் லேப் தொடர்ச்சியாக கண்காணித்து கண்டுபிடித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை என தெரிவித்தார். தொடர்ந்து ஹோலி பண்டிகைக்காக, வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதாக அவர் கூறினார்.
இந்நிலையில் திருப்பூர் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.